Fathar’s Love

fathers_love1     தாயை இழந்த ஒரு குழந்தைக்கு தந்தை பாடும் தாலாட்டு…

     அண்ணையில்லாப் பிள்ளையொன்று
     தந்தை ஒன்றே சொந்தமென்று
     நிம்மதியாய் தொட்டில்கட்டி தூங்குதோ
     பிள்ளை நிலா நெஞ்சுக்குள்ளே ஏங்குதோ!

     இந்த தந்தை செய்த பாவம் இன்று
     உன்னைத்தானே சேர்ந்ததென்று
     எந்தன் உள்ளம் சோக ராகம் பாடுது
     கேட்டுக்கொண்டே இந்த நிலா தூங்குது!

     நீ கண் விழித்த மூன்றாம் நாளே
     உன் தாயும் சென்றாள் சொர்க்கம் தானே
     அந்த உள்ளம் நம்மைத்தானே வாழ்த்துது
     அவள் ஆரிராரோ உந்தன் காதில் கேட்குதோ!

     என் தங்க நிலவே கொஞ்சும் கிளியே
     உன் பிள்ளை மொழி கெட்க உந்தன்
     அன்னை தானே இல்லையென்று _ உன்
     தந்தை உள்ளம் எண்ணி எண்ணி வாடுது
     கேட்டு கேட்டு உந்தன் கண்கள் மூடுதோ!

     தூக்கத்திலே ஏன் சிரித்தாய்
     அன்னை உன்னை கொஞ்சினாளோ
     அப்பன் என்னை திட்டினானோ
     கண்மனியே நீயும் தூங்கும் போதிலே
     உன் அன்னை வந்தாள் வெள்ளி நிலா தேரிலோ!

     கட்டிக்கொண்டாளோ அள்ளிக்கொண்டாளோ
     தன்நெஞ்சினிலே போட்டுக்கொண்டு
     தூளிபோலே ஆட்டிக்கொண்டு
     என்னைவிட்டுப்போன கதைசொல்லி அழுதாலளோ
     உன்ப‌ட்டு க‌ன்ன‌ம் நோக‌ முத்த‌ம் த‌ந்தாளோ!

     என்ன‌ என்ன‌ அறிவுரை சொன்னாளோ
     அம்மா வந்துவிடு என்று நீயும் அழுதாயோ
     இந்த‌ த‌ந்தை பாடும் த‌லாட்டு போத‌வில்லையா
     த‌ங்க‌ ராசாத்தி நீயும் இன்னும் தூங்க‌வில்லையோ!

     உன் அன்னைய‌வ‌ள் தேன் குர‌லில் பாடினாள்
     ம‌ண்ணிலுள்ள பூக்க‌ளெல்லாம் பூக்குமே
     சின்ன‌ பூவே நீயும் ம‌ண்ணில் வ‌ந்து பூத்த‌ நாள்
     அவ‌ள் உன்னைவிட்டு க‌ண்ணைதானே மூடினாள்
    ஆரிர‌ரோ ஆரிர‌ரோ ராரிரோ…..
    ஆரிர‌ரோ ஆரிர‌ரோ ராரிரோ…..

                                  …..ஒரு த‌ந்தை

பின்னூட்டமொன்றை இடுக