FRIENDSHIP – நட்பு

நட்புக்கு கூட கற்ப்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா…

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிக்கிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுர வரைகும்…

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குரையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல‌
பட படன்னு சாப்டதுண்டு…

பதட்டத்தோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல‌
லேட்டா வர்ர‌ நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல…

ஈ அடிச்சான் காப்பி இந்த பக்கம்னா
அத அடிப்பான் காப்பி அந்த பக்கம்
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பது பேர் பாஸ் ஆனதுண்டு…

பசியில யாரும் தவிச்ச‌தில்ல‌
காரணம் தவிக்க விட்டதில்ல
டீக்கடையில கடன் வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல…

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
Fees கட்ட முடியாத நண்பனுக்காக‌
அடகு கடை படியேற அழுததில்ல…

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல‌
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல…

படிச்சாலும் படிக்கலனாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல‌
அரியர்ஸ் வச்சாலும் வக்கலனாலும்
அந்தஸ்து பாத்த ஞாபகமில்ல…

வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
“வெட்டி ஆபிஸர்”னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிக்கிட்டோம்…

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல‌
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்…

பக்குவமா இத கண்டும் காணாம‌
நண்பன் தட்டிக் கொடுக்க நெனைக்கிறப்போ
“சாப்பாட்ல காரம்டா” மச்சான்னு
சமாளிச்சி எழுந்து போவோம்…

நாட்கள் நகர‌
வருஷங்கள் ஓடுது
எப்போதாவது மட்டும் தான்
E-Mail- லும் வருகுது
“Hai da Machan…… How are You? ” வுன்னு…

தங்கச்சி கல்யாணம்
தம்பி காலேஜி
அக்காவோட சீமந்தம்
அம்மாவோட ஆஸ்த்துமா
Personal Loan Interest
Housing Loan Interest
Share Market சருக்கல்
Appraisal டென்சன்
இந்த கொடுமையெல்லாம் பத்தாம‌
“இன்னிக்காவது பேச மாட்டாளா?” ன்னு
இஞ்சி மறப்பா போல ஒரு காதல்

எப்படியோ வாழ்க்க போகுது ஏடா கூடமா
நேரம் பார்க்க நேரமில்ல போதாகலாமா!…

E-Mail இருந்தாலும்
Internet இருந்தாலும்
கம்பெனில வோசு Phone இருந்தாலும்
கையில‌ Calling Card இருன்தாலும்
நேர‌ம் ம‌ட்டும் கெடைக்கிற‌தில்ல‌
ந‌ண்ப‌னோட‌ குர‌ல‌ கேட்க‌
நென‌ச்சாலும் முடிய‌ற‌தில்ல‌
ப‌ழைய‌ப‌டி வாழ்ந்து பார்க்க‌…!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
“Orkut” இருந்தும் “ Scrap” பன்ன முடியாம போனாலும்
“Available” ன்னு தெரிஞ்சும் “Chat” பன்ன முடியாம போனாலும்
“ஏண்டா பேசல?”  ன்னு கோச்சிக்க தெரியல‌
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல….!

என் தோழர்கள் தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக்கூட மறந்தாலும்
வாசம் மாறிப் போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்ப்பு குறையாது!
வ‌ச‌தி வாய்ப்பு வந்தாலும்
“மாமா”   ”ம‌ச்சான்” மாறாது…!

மறுவினைகள்

  1. சூப்பர்

  2. […] பதில் […]


பின்னூட்டமொன்றை இடுக