Mohamed Niyas எழுதியவை | பிப்ரவரி 28, 2011

முதன் முறையாக உன்னைப்பற்றி…

என்னவென்று தெரியவில்லை…
உன் பாசம் மட்டும்
என் கண்களை மறைக்கின்றது…

காலம் கிழித்த கோட்டிற்க்கு
இரு துருவங்கள்
நாம் ஆகிவிட்டோம்…

உன்னிடம்
எப்படியாவது பேச வேண்டும்
என்பதற்க்காக கூட சில நேரம்
சண்டையிட்டு இருக்கிறேன்…
நீ இல்லா தருணம்
உன் நினைவுகளோடு…

தொலைவில் இருக்கையில்
நெருங்கிப்பழகிய மனசு இன்று…
அருகிள் இருக்கும் பொழுதுகளில்
விலகி விலகி செல்கின்றது…

உன்னிடம் வாயோடு
சண்டையிட்டு, எத்தனையோ முறை
மனதோடு மன்னிப்புக் கேட்டு
அழுதிருக்கின்றேன்…

என்னை எனக்கே
அறிமுகப்படுத்திய உன்னை…
எப்படி என்னால்
மறக்க முடியும்…?

நியூட்டனின் விதி
உன் கண்களை பார்த்த பின்
தான் எனக்கு புரிகின்றது…

வீட்டாரின் விதியோ – இல்லை
கடவுளின் விதியோ….
நாம் நாமாக இருக்க வேண்டும்.
என்பது தான் நம் விதி…!

நீ அருகிளிருக்கும் தருணங்கள்
வார்த்தை சிறைவசப்பட்டு,
வெட்கம் கூண்டிலேறி
வாதாடுகிறது……
உரிமையை மீறுவதற்காக….!

நீ இல்லாத் தருணம்,
என் மனம் என்னிடம்
கேள்விகேட்டு தொல்லை
செய்கின்றது உன்னைப் பற்றி…

மழைவிட்ட பிறகும்
சூரியன் வரும்வரை
தூறலாய் விழுந்துகொண்டிருக்கும்…
இலைத்துளி சாரல்போல்,

உயிர் மறையும்வரை…
சொட்டுசொட்டாய்
வழிந்துகொண்டேயிருக்கும் …
உன் நினைவுகள் !


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்