Mohamed Niyas எழுதியவை | மார்ச் 2, 2010

மிருகம்…?

பிறந்த நாளை மறந்ததால் கோபம் வித்யாவுக்கு…..

தேர்வு செய்த பரிசுப் பொருள் பிடிக்கவில்லை உமாவுக்கு…..

பிறர் மத்தியில் ‘குண்டு’ என்றதால் கோபம் ராதாவுக்கு…..

வாங்கி வரச் சொன்ன பியூர் காப்பிப் பொடியை கொண்டு வராததால் முகந்திருப்பிய லட்சுமி….

ஒவ்வொருவரிடமும் பத்துப் பத்து நிமிஷம் கெஞ்சியதில் கிடைக்கவில்லை சமாதானம்….!

அலுவலகம் விட்டுத் திரும்பியதும் ‘வீட்டு வாசப்படி கூட மிதிக்கலை….!

மனுஷன்னு கூடப் பார்க்க மாட்டியா…? எப்ப வருவான்.. வேலை வைக்கலாமுன்னு’ புவனாவிடம் சீறி விழுந்தபோது…..

எனக்குள் இருந்த மிருகத்திற்கு எத்தனை கால்கள்…!?

Mohamed Niyas எழுதியவை | பிப்ரவரி 11, 2010

எனக்குள் இருவன்…!

நடந்ததை நினைக்க…
நடப்பதை நினைத்து…!

ஒரு கிறுக்கன்…
ஒரு அரக்கன்…

ஒரு நண்பன்…
கூடவே ஒரு வம்புக்காரன்…!

பித்தன் என்றும் உண்டு…
சில சமயம் சித்தன் போலவும்
சிந்தனை உண்டு…!

எனக்குள் இருவன்…

ஒருவன்
ஓட ஓட ஓட்டுகிறான்…
இவன் ஓயாமல் ஓடுகிறான்…!

ஒருவன் பகலில்
நடமாடுகிறான்…
இன்னொருவன் இரவில்
தடுமாறுகிறான்…!

கனவை விரும்பும் ஜீவனாய் ஒன்று…
வாழ்வினை எண்ணி வருந்தும் ஜீவன்
மற்றொன்று…!

இறைவனடி நம்பிக்கையில் ஒருவன்…
திண்ணமாய் இன்பம் விரும்பும்
இன்னொருவன்…!

இப்போதும் கூட‌
இதை எழுதுபவன் ஒருவன்…
இழுத்து தள்ளுடிறான்
மற்றொருவன்…!

இத்துடன்
முடித்துக்கொள்வது…

‍‍‍……………….இருவன்…

Mohamed Niyas எழுதியவை | பிப்ரவரி 10, 2010

எப்போதோ பார்த்த நினைவுகள்…!

உன்னை பாவாடை
தாவணியில் பார்த்தது…

என்னை கண்டு ஒளியும்
உன்வீட்டு அறை…

எனக்காக மட்டுமென்று நீ ஒளித்து
எடுத்து வைத்திருந்த நீலபீங்கான் தட்டு…

உன்னை தனியாய் சந்தித்த
கொல்லைப்புற வேப்பமரம்…

நம்மை மெளனமாய் ரசித்த
அந்தி நேர சூரியன்…

நம்மை பார்த்து ஏதோ புரிந்து கொண்ட
உன் அக்கா…

உன்னை மறந்துவிட வேண்டுமென்று
மெள்னமாய் உன் அம்மா…

அன்று தொலைந்து போன உன் சிரிப்பு…
அன்று தொலைந்துபோன என் காதலி…

எல்லாம்…. எப்போதோ பார்த்த நினைவுகள்…!

Mohamed Niyas எழுதியவை | பிப்ரவரி 10, 2010

கரு…!

முட்டி மோதியும் பலனில்லை…
கடினமான வளையக்கூடு
சுற்றிலும் பிசு பிசு திரவம்!

நெளிந்து நெளிந்து
இருட்டுக்குள்
குருட்டு நீச்சல்…

எவ்வழி செல்வதோ புரியவில்லை…?
எங்ஙனம் வந்தேன் விளங்கவில்லை…?

விழியுண்டு பார்வையில்லை…
துடிப்புண்டு ‍ திட இதயமில்லை…
சித்தமுண்டு சிந்தனையில்லை…
சத்தம் உண்டு ‍ அதில் அர்த்தமில்லை…

மொத்தத்தில் இந்த யுத்தத்தின்
பொருள் தான் என்ன…?
எப்போது விடுபடுவேன்,
எதற்க்காக…?
எங்ஙனம் வந்தேன்,
நகர்வதன் காரணம்…?

வெறும் பிண்டமாய்
இருந்த என் பாகங்கள் ‍ இன்று
பெருத்துக் கொண்டே போகின்றன…!

அவ்வப்போது ஒரு
தேவ விரல் தடவுகின்றது!

அத்தழுவலுக்கெனவே
சுற்றியலைகின்றேன்…
இப்போதெல்லாம்…!

என் தவத்துக்கு
வரமாய், சுரமாய் ‍
ஒரு இனிய குரல்…!
விரைவாய்
என்றழைக்கின்றது….!

உறக்கம் கலைந்து
மோதிப் பிறக்கின்றேன்…
“அம்மா…..”
என்றலறியது அதே குரல்…!

என் வரமே, என் செல்வமே…
என உச்சி முகர்ந்தாள்…

மார்பு தேடி
நானும் அழுதேன்
என் மொழியில்….!

Mohamed Niyas எழுதியவை | ஜனவரி 28, 2010

முத்தம்…!

எச்சிலுக்கு மனிதன்
மதிப்பு கொடுப்பது
இங்கு மட்டும் தான்…!

Mohamed Niyas எழுதியவை | ஜனவரி 18, 2010

சர்க்கரை…!

உன் வீட்டு சமையல் அறையில்,
உப்பு இல்லையா…? என்று கேட்டதற்க்கு
பதில் சொல்லாமல் மெளனம் காத்தன‌
நீ தொட்டு
சர்க்கரையாய் மாறிய உப்புகள்…..!

Mohamed Niyas எழுதியவை | ஜனவரி 15, 2010

கண்ணாடி…!

நீ அடிக்கடி கண்ணாடியில்
முகம் பார்க்கிறாய்…!
உனக்குத் தெரியுமா…?
அறவு மட்டும் தான்
கண்ணாடியில் தெரியும்…!
உன் அழகெல்லாம்
என் கண்களில் மட்டும் தான் தெரியும்…!

Mohamed Niyas எழுதியவை | ஜனவரி 15, 2010

ஒரு குழந்தையைப் போல…!

திருமணத்திற்குப் பிறகு
காதல் சலித்துவிடுமே? என்ன செய்வது
என அப்பாவியாகக் கேட்டவறிடம்…,
அப்பா, அம்மா விளையாட்டு
விளையாடலாம் எகிறேன்…
நீ திட்டிவிட்டுப் போகிறாய்…!
நான் உனக்கு அப்பாவாகவும்,
நீ எனக்கு அம்மாவாகவும்,
உணரப் போகும் தருணங்களைத்தானே
அப்படிச் சொன்னேன் என்றதும்…,
ஓடி வந்து கட்டிக் கொள்கிறாய்
ஒரு குழந்தையைப் போல…!

Mohamed Niyas எழுதியவை | ஜனவரி 15, 2010

சுவாசம்…!

இப்படி காதல் காதலென்றே
புலம்பிக்கொண்டிருப்பதற்கு
அலுக்கவே இல்லையா…? என்கிறாய்
சுவாசிப்பதற்கு கூட‌
அலுக்குமா என்ன…?

Mohamed Niyas எழுதியவை | ஜனவரி 15, 2010

செவ்வாய் தோசம்…!

உனக்கு முத்தம் கொடுத்ததும்
எனக்கு பித்து பிடிக்கிறதே…!
இது தான் “செவ்வாய்” தேஷமா…?

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்