Mohamed Niyas எழுதியவை | ஒக்ரோபர் 30, 2010

உன் கொலுசு…

பெண்ணே..!

உன் கொலுசுச் சத்தம் கேட்டவுடன்
கோபம் ஓடி மறைகிறது….

மனசுக்குள் மட்டும் வந்து
சாரல் மழை பொழிகிறது….

புல்லாங் குழலும் சிரிக்கிறது
பூவே உந்தன் முகம் கண்டு….

ராகம் தேடி அலைகிறது
உந்தன் சிரிப்பின் ஒலி கேட்டு….

வேடம் தாங்கல் பறவையெல்லாம்
வீடு தேடி வந்துவிடும்,
புதுயினப் பறவையோ ? என்று….
தன்னிச்சையாக வேவு பார்க்கும்….

கொலுசொலி சத்தத்திலே
கோல மயில் ஆடும்….

கூவும் குயில் வந்து
I Love You சொல்ல ஏங்கும்….

மலரே….!
உன் பிஞ்சு கால்களை
என் நெஞ்சில் வைக்க வேண்டும்….

இஞ்சி இடையினை
கிள்ளி விளையாட வேண்டும்….

கண்ணே….!
உந்தன் கால் கொலுசை
காவல் செய்ய நான் வரவா….?

காவலுக்கு நான் வந்தால்
கணவனாக ஏற்பாயா…..!?


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்