Mohamed Niyas எழுதியவை | ஒக்ரோபர் 31, 2012

அப்பா….

அப்பா….

மரணம் வரை
உருகும் மனித‌
மெழுகுவர்த்தி…..

Mohamed Niyas எழுதியவை | ஜனவரி 4, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

Mohamed Niyas எழுதியவை | மார்ச் 22, 2011

முத்தம்…

உன் இதழோடு
விளையாட ஆசைதான்…
உன் இதலுக்கு சம்மதம் என்றால்…
காயம்பட்டுவிடுமோ
என அஞ்சுகிறது மனது…
காயம் செய்துவிட
கெஞ்சுகிறது உன் உதடு…
உன் உதடுகளின்
சம்மதம் கேட்டு சொல்…!?
என் உதடுகள் காத்திருக்கின்றன
அத்துமீற…
மூச்சு முட்டுமென்றாலும்
எனக்கு ஆசையில்லை…
முத்தங்கள்
முடிந்து விடவும்…..
முடித்து விடவும்…..

***

நீ தந்த
முத்தங்களை விட…
தருவதாய் சொன்ன
முத்தங்கள் தான்…..
என் மனதினை
புயலாய் சுழற்றியடிக்கின்றன…

***

யாருமில்லையென நினைத்து
தனிமையில் கேட்டுவிட்டாய்…
முத்தம் வேண்டுமா ? என…!
இனி மரங்களெல்லாம்
பூத்துக் குழுங்க ஆரம்பித்து விடும்…

***

முறைக்க சொன்னால்
ஏன் முறைக்கிறாய்…?,
முத்தம் கேட்டால்
முறைக்கிறவள்…,
முறைக்க சொன்னால்
முத்தமிடக்கூடாதா…?

***

 

Mohamed Niyas எழுதியவை | மார்ச் 21, 2011

கவிதை கிருக்கல்கள்…

உள்ளத்தில் தோன்றிய
உயிர‌ற்ற வார்த்தைகள் கூட‌
உன் உச்சரிப்பால்
உண்மையான‌ கவிதையானது….

Mohamed Niyas எழுதியவை | பிப்ரவரி 28, 2011

முதன் முறையாக உன்னைப்பற்றி…

என்னவென்று தெரியவில்லை…
உன் பாசம் மட்டும்
என் கண்களை மறைக்கின்றது…

காலம் கிழித்த கோட்டிற்க்கு
இரு துருவங்கள்
நாம் ஆகிவிட்டோம்…

உன்னிடம்
எப்படியாவது பேச வேண்டும்
என்பதற்க்காக கூட சில நேரம்
சண்டையிட்டு இருக்கிறேன்…
நீ இல்லா தருணம்
உன் நினைவுகளோடு…

தொலைவில் இருக்கையில்
நெருங்கிப்பழகிய மனசு இன்று…
அருகிள் இருக்கும் பொழுதுகளில்
விலகி விலகி செல்கின்றது…

உன்னிடம் வாயோடு
சண்டையிட்டு, எத்தனையோ முறை
மனதோடு மன்னிப்புக் கேட்டு
அழுதிருக்கின்றேன்…

என்னை எனக்கே
அறிமுகப்படுத்திய உன்னை…
எப்படி என்னால்
மறக்க முடியும்…?

நியூட்டனின் விதி
உன் கண்களை பார்த்த பின்
தான் எனக்கு புரிகின்றது…

வீட்டாரின் விதியோ – இல்லை
கடவுளின் விதியோ….
நாம் நாமாக இருக்க வேண்டும்.
என்பது தான் நம் விதி…!

நீ அருகிளிருக்கும் தருணங்கள்
வார்த்தை சிறைவசப்பட்டு,
வெட்கம் கூண்டிலேறி
வாதாடுகிறது……
உரிமையை மீறுவதற்காக….!

நீ இல்லாத் தருணம்,
என் மனம் என்னிடம்
கேள்விகேட்டு தொல்லை
செய்கின்றது உன்னைப் பற்றி…

மழைவிட்ட பிறகும்
சூரியன் வரும்வரை
தூறலாய் விழுந்துகொண்டிருக்கும்…
இலைத்துளி சாரல்போல்,

உயிர் மறையும்வரை…
சொட்டுசொட்டாய்
வழிந்துகொண்டேயிருக்கும் …
உன் நினைவுகள் !

Mohamed Niyas எழுதியவை | திசெம்பர் 25, 2010

சாபம்…

விரல் விட்டு எண்ண முடியா வருடங்கள் நம் பிரிவு…!

விரல் விட்டு எண்ணாக்கூடிய நாட்கள் நம் சந்திப்பு…!

நாம் வாழ நினைப்பது,
சூரியனே உதிக்காதே…
நிலவே மறையாதே…

என்பது போல்

நடக்கப்போவதில்லை என நமக்கே தெரியும்…

இருந்தும் அதே

மென்மையாய்…
வன்மையாய்…
புதியதாய் நம் காதல்!
நம் காதல் விசித்திரமானது மட்டுமல்ல‌
என்றோ யாறோ நமக்கிட்ட
சாபமும் கூட…..

Mohamed Niyas எழுதியவை | நவம்பர் 10, 2010

இனிய தீபாவளி வாழ்த்துகள்…!

பட்டரை தான் எங்கள் பள்ளியறை…
கந்தகம் தான் எங்கள் முகபூச்சு…
எழுதுகோளுக்கு பதிலாக யானைவெடி…
கந்தக குவியலில் எப்போதாவது
எழுதி பார்த்ததுண்டு என் பெயரை…
என் இரத்த நிரத்தில் நீங்கள் வெடிக்கும்
வானத்தை காண்கையில்
சொல்ல தோன்றுகிறது…
இனிய தீபாவளி வாழ்த்துகள்…..!

Mohamed Niyas எழுதியவை | ஒக்ரோபர் 30, 2010

தூண்டிலில் சிக்கிய மீனாக…

பிரியமாய் இருந்தவளே…!
பிரிந்து ஏன் சென்றாய்…?
புரியத்தான் முடியல்லை
புன்னாய்ப் போன மனசாலே….

உயிரே… என்று உறவாடி
உயிரயே இப்போ உறிஞ்சுறியே…
காதல் நோய் பிடித்த பின்பு
எங்கே போய் மருந்தெடுப்பேன்…?

காயப்படுத்தி சென்று விட்டாய்
கானல் நீர்தான் வடிகிறதே…
சிந்தனையில் வாடுகிறேன்
சிறைச்சாலைக் கைதியாக…

சீதனமாய் என்ன வேண்டும்
சிறையெடுக்க வந்து விடு…
சீர்வரிசை செய்து செய்து
சீரழிந்தான் எங்கப்பன்…

மதில் மேல் பூனையாக
மாரடிக்குது உன் மனசு…
தூண்டிலில் சிக்கிய மீனாக
துடிக்கிறது என் உசுரு…!!!

Mohamed Niyas எழுதியவை | ஒக்ரோபர் 30, 2010

உன் கொலுசு…

பெண்ணே..!

உன் கொலுசுச் சத்தம் கேட்டவுடன்
கோபம் ஓடி மறைகிறது….

மனசுக்குள் மட்டும் வந்து
சாரல் மழை பொழிகிறது….

புல்லாங் குழலும் சிரிக்கிறது
பூவே உந்தன் முகம் கண்டு….

ராகம் தேடி அலைகிறது
உந்தன் சிரிப்பின் ஒலி கேட்டு….

வேடம் தாங்கல் பறவையெல்லாம்
வீடு தேடி வந்துவிடும்,
புதுயினப் பறவையோ ? என்று….
தன்னிச்சையாக வேவு பார்க்கும்….

கொலுசொலி சத்தத்திலே
கோல மயில் ஆடும்….

கூவும் குயில் வந்து
I Love You சொல்ல ஏங்கும்….

மலரே….!
உன் பிஞ்சு கால்களை
என் நெஞ்சில் வைக்க வேண்டும்….

இஞ்சி இடையினை
கிள்ளி விளையாட வேண்டும்….

கண்ணே….!
உந்தன் கால் கொலுசை
காவல் செய்ய நான் வரவா….?

காவலுக்கு நான் வந்தால்
கணவனாக ஏற்பாயா…..!?

Mohamed Niyas எழுதியவை | ஒக்ரோபர் 27, 2010

Hi…..

Welcome to all

Older Posts »

பிரிவுகள்